விவசாயம் மாயம்
விவசாயம் (மாயம்)
என் வீட்டின் மாடியெல்லாம்
விவசாய நிலமாயி மாறியது
விவசாய நிலமெல்லாம்
மாடி வீடுகளாயி மாறியது
விவசாயம் வீண் பேச்சு
என்பதுவே இவ்வாட்சி
நிலம் சுருட்டுவதில்
பெரும் சூழ்ச்சியில் இவ்வாட்சி
நீருக்கு பஞ்சம் இல்லை
மாரி நீரும் கடல் சேருது
பூச்சி கொல்லி மருந்தெல்லாம்
பூச்சி கொல்வதில்லையாம்
விவசாயி கொல்லியாக மாறுவதே
விவசாயம் மாயமான சாயமோ
இந்நிலை மாறுமோ மகிழ்வும்தான் மாயமோ
என்றும்,
கமலக்கண்ணன்