மழையழைப்புகள்-6
மழையழைப்புகள்-6
ௐலமாய் அழுத முனிச்சாமி மகன்
நட்டவயலுக்கொருதரம்
பத்தாயமெல்லாம் நிரப்பியும்
மிச்சத்தை ரோட்டில் கொட்டி காயவைத்த பண்ணையாருக்கு
பாக்கியக்கிழவி கொடுத்த சாபத்துக்கொருதரம்
ஊரெல்லாம் கூடியெரித்த காமனுக்கொருதரம்
மழை வேண்டி குளத்துக்குள் எறிந்த முனுமாக்காட்டு பிள்ளையாருக்கொருதரமென
மூனு நாளா கொட்டோ கொட்டுனு கொட்டிய மழை பார்க்க
நான் ஊரிலில்லை ….
அம்மா சொன்னவிதமே மழையை ரசித்ததாயிருந்தது