படம் ஒன்று பா இரண்டு

மெல்ல எழுந்து விடு ....!!
``````````````````````````````````````
வாசித்துப் பார்த்தாயோ வங்கியம் என்றெண்ணி
மாசில்லா உள்ளமுடன் மந்தியே !- நேசித்த
புல்லாங் குழலல்ல பூரித்து நீயிசைக்க
மெல்ல எழுந்து விடு .


குடிநீர் கொஞ்சம் கிடைக்காதோ ...??
`````````````````````````````````````````````````````
குறிஞ்சி நிலமும் பாலையாச்சோ
குடிக்கும் நீரும் வற்றிடுச்சோ
குன்ற மெங்கும் காய்ந்திடுச்சோ
குட்டைக் குளமும் வறண்டிடுச்சோ
குதித்துத் தாவ மரமுமில்லை
குடலின் பசிக்கு கனியுமில்லை
குழாயு மிருந்தும் பயனுமில்லை
குடிக்கத் தண்ணீர் வரவுமில்லை
குரங்கின் தாகம் தீராதோ
குடிநீர் கொஞ்சம் கிடைக்காதோ ….!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (15-Jun-15, 8:19 am)
பார்வை : 76

மேலே