சும்மா தாங்க
முட்டிக்கு கீழ் சேலை இறக்கி
கொஞ்சமாய் குனிபவளை
பிடித்து வைத்த படம் போல
அப்படியே நிற்போம் ஐயா
எங்கள் ஊர் ஆண்கள்
அவசரத்துக்கு கடக்கையில்..
முட்டிக்கு மேல் இறங்கா லுங்கியோடு
இரண்டு நடந்துக்கொண்டிருக்க
ஒன்றும் நடக்காதது போல்
வான் பார்த்து நிற்போம் அம்மா
எங்கள் ஊர் பெண்கள்
அவசரமாய் கடக்கையில்...
திறந்த வெளியில்
கடன் கழிப்பது
சுற்றுப்புறத்துக்கும்
ஆரோக்யத்திற்கும்
தீங்கு தீங்கு என்று
சும்மா தந்த டிவியில வந்து
விளம்பரம் செய்பவரே
கட்டுமான பொருட்களையாவது
சும்மா தர சொல்லுங்க
நாங்களே கட்டிக்குறோம்
ஒரு கழிப்பறைய..
--கனா காண்பவன்