பரிமாணம்

கவிதைக் கவின் குடை
சிந்தனை கங்கை ஏந்திய
இதய கமண்டலம் !
அடையாளம்
அடக்கம் வாமனம் !
அளந்திடு என்றால்
விசுவரூபம் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jun-15, 3:18 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 177

மேலே