நீயும் நானும் யாரோ

உன்னை நான் பார்த்தேன்
நீ பேசாவிட்டாலும்
உன் விழிகள் பேசியது

நினைத்து பார்க்கின்றேன்

வாய் ஓயாமல் பேசி
உன் கைகளும் முகமும்
காட்டும் பாவனைகளும்
கண் இமைக்காமல்
பார்த்துகொண்டு இருந்த நாட்கள்

இன்று
மனசுக்குள்ளே ஊமையாய்
அழுது
வெளியே சிரித்து கொண்டு
உலா வருகிறேன்

அன்று கடற்கரை மணலில்
என்றென்றும் உன்னை விட்டு
பிரியமாட்டேன் என
நாம் இருவரும் செய்த சத்தியம்

இன்று கடல் இருக்கிறது
மணல் இருக்கிறது
சத்தியம் எங்கே

நீ வேறு ஒருவருடன்
நான் வேறு ஒருவளுடன்

நீ யாரோ ! நான் யாரோ !

எழுதியவர் : S.ம. Gowri (15-Jun-15, 5:10 pm)
சேர்த்தது : S.M.Gowri
Tanglish : neeyum naanum yaro
பார்வை : 233

மேலே