தலைவன் , தலைவி

வெகுங் காலம் பிரிந்தான் இனி
வரும் காலத்தில் காண்போம்
என்று , மாலை காலத்தில்
சோலையில் கண்டான் அவன்
நினைத்தக் காலம் அன்றே ,
அச்சோலையில் ஆட்களும்
அன்றே !,

பிரிந்தம்மையால் பிரியாதவாறு
இணைந்தான் அவளோடு ,
தேகப் பிதுக்களில் அவளின்
ஞானம் வெடித்து வெளிவர
புவிஈர்ப்பு விசையோ அல்ல
தலைவனின் விழி எதிர்விசையோ ,

அவளின் மயில்விழி அரைத்திரையுடன் கீழ் நோக்கியது , அனுமதிக்கு அறிகுறி அதே என அறிந்து
அவள் யாக்கையணிந்த ஆடை எடுத்து சோலை மூள் தரைக்கு
விரித்தான்,

எப்பெரும் ஆடவரும் மயங்கும்
வளையோசைக் கொண்ட ,
ரோஜா இதழைப் போன்ற மெர்துவன கையால் தன் அழகை மூடி மறுக் கையால்
தலைவனின் நெருக்கத்தை தடுத்தாள் ,

தலைவனோ!, என்னஎன்னவோ
வெகுங் காலம் பிரிந்ததால்
இன்தடையோ?!, அல்ல வெட்ட
வெளிச் சோலையில் வெட்டி
ஆட்கள் வருவாரோ என்ற அச்சமோ?!, அல்ல எப்பொழுதும் வரும் தேவையற்ற. ஞானமோ?!,

தலைவியோ!, சிறைமீட்ட என்
தேகத்தை மாலைக் கதிரவன்
ஒளியெழுப்பிக் கண்டே!,
ஓடும் மேகம் நிற்க் கண்டே!,
பச்சை மரத்தில் கூவும் குயிலும்
கண்டே!, தேன் மறந்து வண்டுகள் கண்டே!, புதியப்
பூவென. வண்ணத்துப்புச்சிகள்
கண்டே!, என்றால்,

தலைவனோ!, நிர்வானத்திற்கு
ஞானம் கொள்ளாதடி என் உடல் உன் உடையாக இருக்கும் என அவளின் ஞான
மையலை விலக்கி காதல் மையலை கொடுத்து தொடங்கினான் !!!...

எழுதியவர் : உமா மகேஸ்வரன் (15-Jun-15, 5:46 pm)
சேர்த்தது : உமா மகேஷ்வரன்
பார்வை : 2456

மேலே