ஊர்போக உதவும் உத்தமர்கள்

ஊர்போக உதவும் உத்தமர்கள்
ஊர்போக உதவும் உத்தமர்கள்
செருப்பாக தேயும் வித்தகர்கள்
பேருந்தின் வகை
அதன் விலாசத்தை
அறிந்தவர்கள்
அறியவைப்பவர்கள்
வழி அனுப்பும் அவர்கள்
வழிமாறி வந்தவர்கள்
மக்களின் ஊர்போகும் கனவை
நிலைக்க வைப்பவர்கள்
ஒரு போதாவது
ஊர் செல்வதை
கனவாக வைத்திருப்பவர்கள்
எத்தனை தொடர்புகள்
எத்தனை போட்டியாளர்கள்
கற்பனை கனவுகள்
கற்பனை கண்ணோட்டங்கள்
மக்கள் ஊர் சென்றால்
இவர்களுக்கு வருமானம்
நாங்கள் ஊர் சென்றால்
இவர்களுக்கு எதிர்காலம்
இணையம் வந்துவிட்டது
அதனும் நிலை பெற்றுவிட்டது
படித்த மக்கள் கூட்டம் இங்கு
நினைத்த ஊர்கள் செல்லலாம் இங்கு
தார்சாலையின் ஜல்லி கற்கள்
சாலையின் பேருந்துகள்
ஒட்டி கிடக்கிறது
முட்டி நகர்கிறது
தாய் அன்பு மனதில்
தாய் வீடு மனதில்
ஊர் செல்ல வேண்டும்
ஊர் செல்ல வேண்டும்
அவர்கள் கேவலப்பட்டாலும்
கேலிகூத்தாக நடத்தப்பட்டாலும்
மனதில் கொல்லாத அவர்கள்
ஊர்போக உதவும் உத்தமர்கள்
-மனக்கவிஞன்