என் அண்ணன் பாரதிக்கு

தாமததுக்கு வருந்துகிறேன்
என் அன்னையின் தலைமகனே..
என் அண்ணன் பாரதியே....

உன் திருமண நாளில்
தீராத வேலைப்பளுவில் திக்குமுக்காடிவிட்டேன்...
மன்னிக்க...

திங்களில் திங்களுக்கு மாலை சூடி
நாற்பதினென் திங்கள் கடந்து
பஞ்ச வருடத்தில் பயணிக்கும்
என் அண்ணன் உன் வாழ்வின் முதல் நாள்....

இன்னாள் திருநாள் ஒருநாள்
என் அண்ணியை கரம் பிடித்த
உன் திருமண நாள்....

அவ்வை பாடிய செந்தமிழும்
கம்பன் தீட்டிய காவியத்தின் வரிகளையும் களவாடி என் அண்ணன்
பாரதியின் மணநாள் துதி பாடி வாழ்வாங்கு வாழ வாழ்த்துவதோ உன் தம்பி.....!

எழுதியவர் : வாணிதாசன் (15-Jun-15, 9:46 pm)
சேர்த்தது : வாணிதாசன்
பார்வை : 522

மேலே