உலகம் பிறந்தது நமக்காக - 12266
தனித்திறமைகளை உணர்ந்து கொள் - நீ
தலைவன் ஆகலாம் கூட்டத்தில்........
தாமரை அழகாய் சிரிக்குது பார்
தனைச்சுற்றி இலைகளின் நடுவினிலே.....!!
பத்தோடு ஒன்று பதினொன்றாய்
படுத்தே கிடக்கவில்லை தாமரையும்
பகலவன் ஒளியில் நிறமெடுத்து
பார்வையை மயக்குது பார் தோழா.....!!
நல்லதை தெரிந்தெடு
நாளும் வளர்ச்சியுறு
நஞ்சும் அமுதாகும்
நடப்பதெல்லாம் நலமாகும்.....!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
