இப்படிக்கு தமிழச்சி

அடக்கி பார்க்காதே அடி பணிய மாட்டேன்
அன்பினால் கட்டி போடு ஓடி விட மாட்டேன்
தூக்கி எறிந்தால் துடைப்பம் ஆகி விட மாட்டேன்
தூரிகையாய் வண்ணம் பல தீட்டுவேன்
சட்டென சரித்திட வாழையும் இல்லை
சரணம் கேட்டிட கோழையும் இல்லை
முண்டாசுக்காரனின் மொழி அறிந்தவள் இப்பெண்ணே

எழுதியவர் : தமிழ் மகள் (16-Jun-15, 2:00 pm)
பார்வை : 198

மேலே