மானினம் நான்
எப்போது
சொல்ல போகிறாய் என் காதலை!
கடல் வற்றியபின்பு என்றால் - என்
கண்ணீரை நிறுத்துகிறேன்
அதுவும் உப்புதான் ........
காலம் வரவில்லை என்று நீ
சொன்னால் 'காலனை'
அழைக்கிறேன் - என்
உயிரை விட்டுவிட்டு உடலை எடுத்துசெல்ல ........
மலரின் அனுமதிபெறா
தேன் உண்ணும் வண்டினம்
அல்ல நான்.........
.உன் மனதின் அனுமதிக்காக
காத்திருக்கும் மானினம் நான்..................
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்