ஹைக்கூ தோட்டம் தந்த தலைப்பு இயற்கை கவிஞர் இரா இரவி

ஹைக்கூ தோட்டம் தந்த தலைப்பு !
இயற்கை ! கவிஞர் இரா .இரவி !
மனமில்லை
கடந்து செல்ல
சிரிக்கும் மலர்கள் !
கண்கள் இரண்டு போதவில்லை
கண்டு ரசிக்க
இயற்கை !
காயமில்லை
வானிலிருந்து விழுந்தும்
மழை !
புள்ளிகள் உண்டு
கோலம் இல்லை
நட்சத்திரங்கள் !
போனது கொள்ளை
முழு மனமும்
முழு நிலவு !
உண்டு வேறுபாடு
காலை மாலை
ஒரே வானம் !
வெளியே தெரிவதில்லை
வேர்களின் உழைப்பு
வேர்களின்றி மரமில்லை !
ஒய்வு என்றால்
என்னவென்று அறியாதவன்
கதிரவன் !
வளைந்து வணங்கி
உரைத்தது உழைத்து உண்ணுக
விளைந்த நெற்கதிர் !
.
கோடையில் பெய்த மழை
குதூகலத்தில் பூத்தன
மலர்கள் !
கண் தானம் !