தலைமுறைகள்
கள்ளியும்
நெருஞ்சியும் பூத்த
பொட்டல் காட்டில்
முன்தலைமுறை
கற்றுக் கொடுத்தது
ஒத்தயடிப் பாதை போட....
முட்களின்
முத்தத்தால்
ரணமான பாதங்கள்
ஒத்தடம் கொடுத்து
செப்பனிட்டதால் நீண்ட
ஒத்தயடிப் பாதையில்
இறுமாப்புடன் பயணித்தது
அடுத்த தலைமுறை...
சிறகடிக்கும்
ஓசை கேட்டு
திரும்பி பார்க்க
பறந்தெழும்பிய
புத்தம்புது தலைமுறைக்கு
சிறகுகள் கொடுத்தது யார் ?
பறக்க கற்றுக் கொடுத்தது யார் ?
கீழே மிஞ்சியது ..
அண்ணாந்து பார்க்கும்
ஒத்தயடித் தலைமுறை !