குமுறும் குழந்தைத் தொழிலாளி

"குமுறும்
குழந்தைத் தொழிலாளி"
புத்தகம் படிக்கப் பிறந்தவன் நான்
புத்தகம் படைக்கின்றேன்
மாறிப்போனதாம் தலையெழுத்து
கல்லா பெட்டிக்கு கல்வி விற்கும்
கல்வி வியாபாரி சொல்லிச் சென்றான்
உண்மையா யென்றதை யுணர்வதற்கோ
-ஏழை
என்னிட மில்லையே கல்வியெனுங்
கண்
என்நிலை காணா நாளைய வுலகை
நான்படைக்க வேண்டியே
உழைக்கின்றே னின்று
உழைப்பின் பயனது ஓர்நாள் கிட்டும்
குழந்தைத் தொழிலாளி இல்லாநிலை
யெட்டும்
எட்டும்வரை எட்டுவேன்
வெற்றிமுரசு கொட்டுவேன்
ஏழைக்கும் கல்வி எட்டுங்கனி
யாக்குவேன்
கல்விதானே யெங்கள் முதற் கனவு....

எழுதியவர் : Sundaram (17-Jun-15, 11:54 am)
பார்வை : 55

மேலே