காதல்!
காதல் என்பது பார்வையின் மொழியே
கவிதை என்பது காதலின் மொழியே
கவிதையும் பார்வையும் வார்த்தைகள் பேசுமே
காதலும் நேசமும் உயிரினில் கலக்குமே-இது
காதல் தேசமடா-இங்கு
காதல் ஆட்சியடா-இது
காதல் வாழ்க்கையடா-இங்கு
காதல் சுவாசமடா
காற்றும் இங்கே கவிதை சொல்லுமே
கற்கள் கூட கனிகள் ஆகுமே
கானம் இசைக்கவே பூக்கள் மலருமே
காதலின் ஊடலை நிலவு ரசிக்குமே
இமைகள் அழைக்கவே மௌனம் பேசுமே
இதயம் பேசவே காதல் சிறகடிக்குமே
காதல் ஈர்ப்பிலே உலகம் அசையுமே
காதலர் மூச்சிலே உயிர்கள் பிறக்குமே
உறவு கொள்ளவே இளமை விரும்புமே
உயிரும் தீண்டவே உலகை மறக்குமே
ஒரு நொடி பிரிந்தாலே உள்ளம் வலிக்குமே
ஒரு உயிர் பிரிந்தாலே மறுஉயிர் மடியுமே.