அமைப்பேன்

உன் கண்மணி எடுத்து மின்னலை அமைப்பேன்
உன் கண்ணிமை எடுத்து மனக்கதவுகள் அமைப்பேன்
உன் கனவுகள் எடுத்து திரைப்படம் அமைப்பேன்
உன் கன்னங்கள் எடுத்து கனிகள் அமைப்பேன்

உன் உதடுகள் எடுத்து சுவைகளை அறிவேன்
உன் கால்தடம் எடுத்து சிற்பங்கள் வடிப்பேன்
உன் மௌனங்கள் எடுத்து ஓவியம் தீட்டுவேன்
உன் பார்வைகள் எடுத்து பகலினை அமைப்பேன்

உன் கூந்தலை எடுத்து இரவினை அமைப்பேன்
உன் பற்களை எடுத்து பவளங்கள் அமைப்பேன்
உன் புன்னகை எடுத்து மலர்வனம் அமைப்பேன்
உன் புருவங்கள் எடுத்து புல்வெளி அமைப்பேன்

உன் உஷ்ணம் எடுத்து வெயிலை அமைப்பேன்
உன் வியர்வை எடுத்து மழையினை அமைப்பேன்
உன் உதடுகள் எடுத்து சுவைகளை அறிவேன்
உன் பற்களை எடுத்து பவளங்கள் அமைப்பேன்

உன் பாதைகள் எடுத்து பயணங்கள் அமைப்பேன்
உன் கரம் எடுத்து வீணையை அமைப்பேன்
உன் விரல் எடுத்து தந்திகள் அமைப்பேன்
உன் பெயர் எடுத்து தாளத்தை அமைப்பேன்

உன் மொழி எடுத்து கீதத்தை இசைப்பேன்
உன் நிழல் எடுத்து ஆடைகள் நூர்ப்பேன்
உன் ஆடை எடுத்து வானவில் அமைப்பேன்
உன் இதயம் எடுத்து நெஞ்சுக்குள் சுமப்பேன்

உன் இடை எடுத்து நூலகம் அமைப்பேன்
உன் மேனியை எடுத்து காகிதம் அமைப்பேன்
உன் உணர்வுகள் சேர்த்து என்னுயிர் சேர்ப்பேன்.

எழுதியவர் : உடுவையூர் தர்ஷன் (12-May-11, 4:10 am)
பார்வை : 322

மேலே