காதல் செய்யும் மாயம்

கண்மணியே! உன்
கனவுகளை மட்டும் தான்-என்
கண்கள் சுமக்குதடி.
அதனால் தான்-உன்னை
கண்ணுக்குள்ளும் வைத்தும்
காதலிக்கின்றேன்.

எனவே தான் - இன்று
கடவுளிடம் வரம்
கேட்கின்றேன் -என்
கனவுகளை பிரித்துவிடாதே
என்று....

முழுநிலவே! -உன்
மூச்சுக்காற்றை எடுத்து
உயிர்வாழும் ஒரு ஜீவன்
நானனடி.
நிலவும் பேசுமென்று
உன்னை கண்டபோது தான்
அறிந்தேன்.

காற்றும் பாடுமென்று
உன்மொழி கேட்டபோது தான்
உணர்ந்தேன்
உன்
கால்தடத்தில்
காத்திருந்தபோது -பல
கவிதைகளை கேட்டேன் -இன்று
எனக்குள் நான் கேட்பது
காதல்செய்யும் மாயம்
இது தானா என்று......?

எழுதியவர் : உடுவையூர் தர்ஷன் (12-May-11, 4:10 am)
பார்வை : 382

மேலே