மீண்டும் உலகம் பிறக்கட்டும் - உதயா

சரிபாதி உரிமைகள்
நாட்டில் வந்தபின்னும்
பெண் குழந்தையை
கொன்று புதைக்கும்
தாயும்

மது அருந்தியப் பின்
தாய் தாரம் சகோதரி மகள்
இவர்களுக்கு வேற்றுமை தெரியா
தந்தையும்

காமத்துக்காக பிள்ளையை
பெற்று குப்பையில்
எரிந்து செல்லும்
பெற்றோரும்

காதலித்த பெண்ணை
காடைவீதியில் விற்பனை
பொருளாக்கும் காதலனும்

பணத்திற்காக காதலனை
ஏமாற்றி புது காதலனை
தேடி செல்லும்
காதலியும்

நல்வனாய் பழகி
நம்பிக்கை துரோகம்
செய்யும் நண்பனும்

தள்ளாத வயதில்
தாய் தந்தையை
பிச்சையெடுக்க வைக்கும்
மகன்களும்

தாய் சகோதரி
சொல்லை கேட்டு
மனைவியை
கொடுமை படுத்தும்
கணவனும்

கணவனுக்கு உண்மையாய்
இல்லாத மனைவியும்

பெண்ணொருத்தியும் கற்பு
நடுரோட்டில் பறிக்கப்பட்டும்
கண்டும் காணாமல் செல்லும்
மக்களும்

ஊனமுற்றவனை
ஊனக் கண்ணால் நோக்கும்
சகவாசிகளும்

யுகங்கள் கடந்த பின்னும்
சாதி மதத்தை பாடும்
சான்றோரும்

நாட்டினை காக்கும்
பொறுப்பில் இருந்துக் கொண்டு
நாட்டினையே காட்டிக் கொடுக்கும்
அதிகாரிகளும்

போதிய அறிவினை பெறாமலே
தன்னை ஆசான் என்று சொல்லும்
பள்ளி ஆசிரியரும்

கோவிலில் பணக்காரனுக்கு
முதல் உரிமை அளிக்கும்
பூசாரிகளும்

கொடுமைகளை கண்ணில்
கண்டபின் அவற்றினை
கவியில் புகுத்தியே
கவிஞ்சனாக துடிக்கும்
கவிஞனும்

நாட்டிற்கே பாரமாய்
பலர் இருந்தும்
குடும்ப பாரத்தை
குறைப்பவனை
அழைக்க நினைக்கும்
எமனும்

அனைத்தினையும் அறிந்தும்
ஏதும் அறியாதது போல் இருக்கும்
கடவுளும்

நாசமாய் போகட்டும்
அழிந்து போக்கட்டும்
வெயிலால் கருகி சாகட்டும்
நீரில் மூழ்கி சாகட்டும்

இவர்கள் கதற கதற
இவர்களின் உயிரினை கழுகு பறிக்கட்டும்
இவர்களை விரட்டி விரட்டி
புலியும் சிங்கமும் வேட்டையாடட்டும்

இவர்களை துரத்தி துரத்தி
காளையும் காண்டாமிருகமும்
எருமையும் முட்டட்டும்

மதம் பிடித்த யானை
இவர்களை காலால் நெசுக்கியே
மண்ணோடு மண்ணாகட்டும்

ஆங்காங்கே எரிமலை வெடித்து
உலகமே சாம்பலாகட்டும்

புவி பிளந்து உலகமே
மண்ணுக்கு இரையாகட்டும்

வான் திரை கிழிந்து
அனைவரும் புவியைவிட்டு
ஒழிந்து போகட்டும்

இப்புவி எரிந்து சாம்பலாகி
கங்கையில் மூழ்கி
மோட்சம் பெறட்டும்

மீண்டும் புவி பிறக்கட்டும்
அதில் தர்மம் கருணை
அன்பு நேசம் பாசம்
சமத்துவம் இவை மட்டும்
பிறக்கட்டும்

அதர்மம் பிறந்தால்
மீண்டும் உலகம்
அழியட்டும் ....

எழுதியவர் : udayakumar (18-Jun-15, 12:27 pm)
பார்வை : 420

மேலே