விசுவ ரூப தரிசனம்
விசுவ ரூப தரிசனத்தில்
தெரிந்தது..
மலைகளும்..
மடுக்களும்..
ஆர்ப்பரிக்கும் கடலும்..
அண்ட சராசரங்களும்..
நட்சத்திர மண்டலமும்..
பாம்புகளும்..
மிருகங்களும்..
எல்லாம்..எல்லாம்..
ஆம்..
உற்று நோக்கிட..
எல்லாம்..
நம் உள்ளே தெரிகின்ற..
தரிசனம்..
எது கூர்ந்து
நோக்கப் படுகிறதோ ..
அதுவாக ..
வாழ்வு..!
ஓநாய் பிடித்தால்..
ஓநாயாக..
மான் என்றால்..
மானாக..
தேன் என்றால்..
தேனாக..
மனம் போல வாழ்வு!