நாசி முனையில்

நாசிகள் வழியே..
உள்ளும் புறமும்
வந்து கொண்டும்
போய்க் கொண்டும்..
இருக்கின்ற
காற்றை கவனிக்க..
தொடர்ந்து கவனிக்க..
நாசி முனையில் நிற்கும்
மனம்..
நினைவுகள்..
எண்ணங்கள்..
தொலைந்து போகும்..
இல்லாமை
விளங்கும்..
நான் என்பதும்
இல்லாத நேரம்..
ஒரு நொடி போதும்
ஒரு நாளைக்கு..
வாழ்க்கையின் போக்கு
மாறும்!

எழுதியவர் : கருணா (19-Jun-15, 4:02 pm)
Tanglish : naasi munaiyil
பார்வை : 306

மேலே