நன்னெறி
காமம் கொண்ட காதல் என்றும் வாழ்ந்ததில்லையே!
வஞ்சம் கொண்ட நட்பு என்றும் நீண்டதில்லையே!
விவேகமற்ற வீரம் என்றும் வென்றதில்லையே!
தாய்மையற்ற தலைவன் என்றும் நிறைந்ததில்லையே!
தூய்மையற்ற இடங்கள் என்றும் சிறந்ததில்லையே!
உண்மையற்ற செயல்கள் என்றும் மீண்டதில்லையே!
வாய்மையற்ற பேச்சு என்றும் மதிப்பில்லிலையே!
நேர்மையற்ற தொழில்கள் என்றும் நன்மையில்லையே!
பண்புகொண்ட வாழ்க்கை என்றும் சிக்கல்லில்லையே!
பாசம் கொண்ட உறவு என்றும் வீழ்ந்ததில்லையே!
நன்னெறி கொள்வோம்!!!
நல்வாழ்வு பெறுவோம்!!!
பிரியமுடன்
அசுபா....