காடும் காற்றும்
காட்டை நாடாக்கினாய்
மீதம் இருந்த காடு
நம் நாட்டில் குடியேறியது
அதையும் அழித்து வீடாக்கினாய்
இருந்தும் நல்ல காற்று
நம்மை சுற்றியது
அதையும் நச்சுண்டாக்கி வீணாக்கினாய்
நீ வாழ்ந்துவிட்டாய்
உன் வம்சம் வாழ வேண்டாமா ?
பத்து தலைமுறை அமர்ந்து உண்ண
சொத்து சேர்த்தால் போதுமா?
நீ சுவாசித்துவிட்டாய்
உன் வம்சம் சுவாசிக்கவும் வாய்ப்புக்கொடு
காடும் காற்றும் இல்லாத
நாடு மற்றும் எதற்கு?
மரத்தை நடு
அதற்கு உரத்தை கொடு
பின் செழிக்கும் பார் இந்த நாடு