இரந்தும்

ஈவது அறிவேன்
ஆனால்
இரந்து பழக்கமில்லை!
இருந்தும்
அன்னமிட்ட கை இன்று
என் தலை மேலூன்றி
தவிக்கிறேன்!
கழனி காட்டில்
கலய நெல்லல்ல
கஞ்சி நெல்லுக்காக
கவலை!
நிலமகள் செழிக்க
வான்மகள் அருள
வர(ம்) வேண்டும் வருணனே!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (19-Jun-15, 8:45 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 70

மேலே