ஆயத்தம்
வடபழனி
பிரதான சாலையின்
ஐந்து நட்சத்திர
விடுதியில்
மதுபான விருந்தை
சாவகாசமாய்
முடித்துவிட்ட
ஒரு அப்பா
சைதாப்பேட்டை
இரயில்நிலைய
டாஸ்மாக்கில்
அன்றைய கூலியை
மொத்தமாய்
கொடுத்துவிட்ட
ஒரு அப்பா
தள்ளாடி
தயாராகி
கொண்டிருந்தனர்
அவர்களின்
குழந்தைகளை
அப்பா இல்லாமல்
தனியே தவிக்க விட.