தெரியவில்லை
நீயே மனமுவந்து
கொடுத்தும் எடுத்தும்
சென்று விட்ட காதலின்
இரு தருணமும்
நினவுச்சுருளாய் விரிய
இதயம் கொஞ்சமாய்
ரணப்பட்டிருந்தது
உறக்கம் முழுதுமாய்
தொலைந்துபோயிருந்தது
இசைஞானியின் மருந்து
செவி வழி நுழைந்து
இதயத்தை
கொஞ்சமாய் நீவிவிட்டதில்
எப்போது உறங்கிப்போனேன்
தெரியவில்லை.