தந்தை எனும் தாய்ப் பறவை

கவலைகளும் கண்ணீரும் தன்னோடு மறைப்பவன்
கண்ணுறங்கும் வேளையிலும் தன் குடும்பம் நினைப்பவன்

அன்னையின் பாசம் கண்ணீரில் அறியலாம்...
தந்தையின் பாசம் கைப்பிடியில் அறியலாம்...

மணமுடிந்து மகள் பிரியும் வேளையிலும்
மகன் உயர்ந்து பார் புகழும் வேளையிலும்
மறைவாய் விழிமழை பொழிவான்
மனதால் உள்ளுக்குள் நெகிழ்வான்...

தான் காணா உலகை தன் பிள்ளை காணவே
தோள்தூக்கி தூர உலகம் காட்டுபவன்..

தோள் சுமந்து வரும் தந்தையைப் பார்த்து
தேர் சுமந்து வரும் கடவுள் சொல்லலாம்..
அதோ...
மனித கடவுள் மகனைத் தூக்கி
என்னைக் காட்டுகிறான் என்று..

கூடு காத்து குஞ்சு வளர்ப்பதும்
இரைத்தேடி இனம் காப்பதும்
தாய்ப் பறவை கடமையென்றால்
மனித இனத்தில் தாய்ப் பறவை
தந்தைதான் இங்கு...

எழுதியவர் : மணி அமரன் (21-Jun-15, 4:57 pm)
பார்வை : 1032

மேலே