கண்ணீர்துளி

மாலையில் மனம் திறந்தேன்,
விழியில் விழுந்து விரல் தொடுத்தாள்....
நிலைபெற எண்ணி திளைத்தேன்,
நீயோ நீங்கிவிட்டாய்....
தீராத காதலால்
நின் நினைவை வருடினேன்,
வருடிய நினைவு வாடியதால் இறந்தேன்....
இந்த நிலையிலும்
என் விழிக்குளம் நீரோடியது,
அன்பர்கள் என் உருவபடத்திற்கு
மாலைதொடுத்து புலம்புவதால்....