தீண்டல்
கண்ணெதிரே தோன்றிய
பூக்களை அவன்
தீண்டிப் பார்க்கிறான் இமைகளால்..
தூரத்தில்
பாடும் குயில்களை
தீண்டிப் பார்க்கிறான்
இமைகளை திறந்து விழிகளால்..
நடனமாடும் ஓவியத்தை
அசையாமல் நின்று
தீண்டிப் பார்க்கிறான் கைகளால்...
வாசத்தை சுமந்து வரும்
மேல்திசை காற்றை
தீண்டிப் பார்க்கிறான்
கைகளை மூடி..
ச்ச
அவனுக்கு
இல்லாமலே இருந்திருக்கலாம்
உடல்..
--கனா காண்பவன்