எல்லாம் அவள் செயல் 4
கவிதை வேண்டாம்
கட்டுரை வேண்டாம்
காவியம் வேண்டாம்
யாரேனும் எழுதிவிடுங்கள் என்னில்
ஒருமுறையேனும் "அவள் பெயரை"
வேண்டித் தவம் கிடக்கிறது
"வெற்றுக் காகிதம்"
இந்தியாவின் தலைநகர் எது?
யார் தேர்வு செய்தது?
இத்தனை கடின வினாவை
வினாத்தாளும் விடைத்தாளும்
கோபத்தில் குமுறியது
தேர்ந்தெடுத்தவரை திட்டியது
விடைத் தெரியாமல் விழித்திருக்கும்
"அவளைக் கண்டு"...
மேஷம்-மகிழ்ச்சி
தினப்பலன் பார்த்து சிரிக்கின்றாள்
இவ்வாறே அச்சிடுங்கள் எல்லா நாட்களும்
தினமுவள் சிரிக்கட்டும்
கிழித்தாலும் கலங்காமல்
கிறுக்கு பிடித்து புலம்பியது
"நாட்காட்டி"
கசப்பு
கசப்பு
கசப்பு
யார் செய்தது என்னை
இத்தனை கசப்பாக?
தன்னைத் தானே நொந்துகொண்டது
அவள் விழுங்காமல் சென்ற போது
"காய்ச்சல் மாத்திரை"
என்னை எடுத்துச் செல்
என்னை எடுத்துச் செல்
நூலக நூல்களெல்லாம் தனக்குள்ளே புலம்பியது
எத்தனையோ நூல்கள் பார்த்து
எல்லாம் விடுத்து எடுத்துச் செல்கிறாள்
கவிதை நூல்களை கையொப்பமிட்டு
சந்தோஷத்தில் சொல்லியது
அவள் கையிலிருந்த கவிதை நூல்
இன்று என்னை ஒரு கவிதை
படிக்க போகிறதென்று..