ஆவலால் எழுதினேன் ஆதலால் எழுதினேன்

ஆவல் ஆவல் ஆவல் முதல் கவிதையை
நூலாய் கையில் பார்த்திடத்தான்
கூவல் கூவல் கூவல் மனது குயிலானது
ந‌ற்செய்தி இதனைக் கேட்டதும்தான்
நாவல் நாவல் நாவல் சுவையாய் மகிழ்ச்சி
நிறைய உள்ளத்தில் ஊட்டுதுதான்
தூவல் தூவல் தூவல் எடுத்து வாழ்த்து
வரைந்திட இதயம் துடிக்குதுதான்
ஏவல் ஏவல் ஏவல் நினைப்பு பெருமையாய்
மனசுக்குள் புதியதாய் தோணுதுதான்
கேவல் கேவல் கேவல் வந்தே நெஞ்சம்
கண்ணீர் பெருகி அழுகுதுதான்....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (22-Jun-15, 6:55 pm)
பார்வை : 906

மேலே