நட்பெனும் கருவறை - சகி
நட்பே ....
புரிதல் இல்லாமல்
பழகி விட்டுசெல்லும்
சில உறவுகள் ....
புரிந்துக்கொண்டு
பிரியாமல் நம்முடன்
வாழ்ந்துக்கொண்டிருக்கும்.
சில நட்பின் நினைவுகள் .....
முகம் காணாமல்
முகவரி அறியாமல்
நட்பெனும் கருவறைக்குள்
அனைத்து நட்பும்
உதயாமாகிறது இப்புவியில் ..........
சில நட்புகள்
பிரித்து சென்றாலும்
மரணத்தின் நொடிவரை
நினைவுகள் வாழும் ........
சில நேரங்களில்
விழிகளின் ஓரங்களில்
கண்ணீர்த்துளிகளில் உயிர்
வாழும் சில நட்பின்
நினைவுகள் .....