ஹைக்கூ 2
ஹைக்கூ...2

உற்றுப் பார்த்தால்
நம்மிடம் பேசும்
மலர்கள் !
தண்ணீரின் சுவை
அட்சயமானது
கலப்படம்
இன்ப ஆபத்து
நவீன உலகில்
நாகரீகம்
உணர வைக்கும்
உணர்வின் வலி
மனிதநேயம் !
மூட்டைமூட்டையாய்
மனிதன் சுமக்கின்றான்
மண் சுரண்டல்
போராட்டம் காற்றோடு
அணையாமல் எரிகிறது
மெழுகுவர்த்தி !
ஓய்வே இல்லை
பணம் படிக்கிறது
பணக்காரன்
ஒளி இருள் மாறும்
தன்னம்பிக்கை யில்
துன்பம்
சனியும் பிணமும்
நண்பர்கள் தான்
துணை பிணம்
மயானம் சிரிக்கிறது
நவீன காட்டில்
மின்சாரத்தகனம் !
புகை எரிகிறது
நெருப்பில்லாமல்
பனிமூட்டம் !
செவிக்கு உணவு
சிந்தையில் விசம்
தீய சொல்