சென்ரியு

ஹைக்கூ ! சென்ரியு
நம்பிக்கையோடு தேடுகிறது
தீராத பசியோடு சுற்றுகிறது
கழுகு
வாழ்ந்தால் நம்பிக்கையோடு
வரலாற்றில் பதிக்க வழியுண்டு
கழுதைக்கும்!
சீர்சிறப்பும் மூன்றாம் பிறை போல்
பண்பாடு
சீர்சிறப்பும் பவுர்ண்மி போல் சீரழிவு
நவீன உலகம்
தலையாகத் தோன்றியது
எக்காலமும் அறிந்தது
தமிழ்!
ரசிப்பதற்கு மட்டுமே
பறிப்பதற்கல்ல
பூக்கள்!
பக்தர்களுக்கு அருளுரை
கோடி ஆசைகள் காவியுடை
சாமியார்!
சைவம் அசைவமாகிறது
அசைவப் பிரியர்களுக்கு
ஆடு!