பழமொன்ரியு







.                 பழமொன்ரியு


தேவை விளம்பரம் 
பூக்கடைக்கு அல்ல
பூக்கூடை


வாத்தியார் பிள்ளை
மக்கல்ல வார்த்தையில்
படிக்காத மேதை

நாய் விற்ற காசு குரைக்காது 
குரைத்தது
நாய் குட்டி 

நிலையாமை ஒன்றே 
நிலையானது 
இயற்கை

நீர் உயர 
நெல் உயரவேண்டும்
தூங்கா விதை

பெண் புத்தி பின் புத்தி 
பின்பு நடப்பதை 
அறிவுறுத்தும் புத்தி ! 

பொறுத்தார் பூமி ஆளாமல்
பறந்தது
கட்சிக் கொள்கை

பசுமரத்தாணி போல பதிகிறது
ஊடகத் துறையின்
நாடகங்கள்

பழகப் பழக 
புளிக்காது பால்
அழகு நிலையம்

பாம்பு என்றால் 
படையும் நடுங்குமா?
நடுங்காது சுனாமி

பிள்ளையில்லா வீட்டில் 
துள்ளி விளையாடவில்லை
ஆடாத  தொட்டில்

கடுகு சிறுத்தாலும்
காரம் குறையவில்லை
விலைவாசி

பல் போனால் 
சொல் போகவில்லை 
அரசியல்வாதி வாக்கு

பிள்ளையார் பிடிக்க 
குரங்காய் முடிந்தது 
வேலைவாய்ப்பு

சிப்பியில் விழும் 
எல்லா கடல் துளி நீரும்
முத்தாகாது

நல்ல மரத்தில் புல்லுருவிகள் 
உணவுத் துறையில்
அயலார்

வயதாகும் முன்பு
நரை வரும் 
இளநரை ! 

கூரான அம்பில்
சாணம் தீட்டுபவர்கள்
கொள்கை வாதிகள்

தோல் வீசி
பழம் விழுங்கும்
அரசியல்வாதி ! 









எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (23-Jun-15, 11:48 am)
பார்வை : 117

மேலே