என்னவனே உன் மௌனம் - சகி
![](https://eluthu.com/images/loading.gif)
என்னவனே ....
வீழ்ந்துக்கிடந்த என்னை
உன் காதல் கரங்கள்
கொடுத்து மேல் தூக்கினாய் ......
சிலநேரங்களில் இதமாய்
வருடும் தென்றலாய்
என்னை அணைக்கிறாய் ......
சிலநேரங்களில் உன்
வார்த்தைகளில் புயலாக வீசி
கடலுக்குள் மூழ்க செய்கிறாய் .....
உன்னை சொந்தம்
கொண்டாடும் உரிமைகளை
எனக்கில்லை என்கிறாய் .....
மௌனமாய் என்னை
காயப்படுத்தும் உன் மொழிகளில்
உணர்கிறேன் உன் காதலை ...
என் வலிகளை உணர்ந்தும்
மௌனப்போர் புரிகிறாய் ....
உடைத்துவிடு
உன் மௌனக்காதலை
இந்நொடியே .........
காத்திருக்கிறேன் உன்னவள்
நம் காதலுடன் ..............