எப்போது வருவாய்.....
தனியாய் நடக்கிறேன்
என்னோடு
துணையாய் வருகிறது
மழை....
பூஞ்சாரல் தூவிட
நனைகிறேன்
உடல் முழுதும்....
ஆனால்
உள்ளுக்குள் நான் இன்னும்
வெப்பமாய்.....
உள்ளத்தில்
பூஞ்சாரல் தூவிட
வைப்பது நீயும்....
உன்
நினைவுகளும் மட்டும்தான்....
எப்போது வருவாய்
காத்திருக்கிறேன்
உனக்காய்....