அம்மா எ ஆத்தா
அம்மான்னு சொல்றத விட
ஆத்தான்னு சொன்னாதான்
வாய் நிறைய கூப்பிடுரானு நெனப்பா
என் ஆத்தா ...
சாயங்கால நேரம் -இரவுக்கு
சமைக்கப் போகும் முன்பு
லேசாப் பசிக்குதுன்னு சொன்னா
தட்டாங்காய் பிடுங்கி
ஆவிபறக்க அவிச்சுப் போடுவா தட்டுல..அது மட்டுமா
சூடாக் களி கிண்டி
கருவாட்டுக் குழம்பும் வச்சு
கரண்டியில எடுத்து வச்சா
வயிறு நெரஞ்சாலும் ருசி குறையாது
மறுநாள் விடியுற வரைக்கும்...
அலுக்க வேலை செஞ்சுட்டு
ஆத்தா பக்கம் வந்து உக்காந்தா
கம்மங்கூல் கரைச்சுக் குடுப்பா
கடுச்சுக்க வெள்ளக் கட்டியும்
தொட்டுக்க பூண்டு ஊறுகாயும் ...
உடம்பு சரி இல்லன்னு படுத்துக் கிடந்தா
நிம்மதி இல்லாம தவிப்பா என் ஆத்தா
பூசாரிகிட்ட திருநீறு வாங்கிப் போடுவா
சூடம் சுத்திப் போடுவா
தனக்குத் தெரிஞ்ச வைத்தியத்தைஎல்லாம்
தன்னம்பிக்கையோட செய்வா....
தொடரும்....