அம்மா

தீப்பொறி ஒன்று
தீபங்கள் நூறு
ஒளிவிடக் காரணம்
ஒரு குச்சி தானே....!!!
ஒரே ஒரு மழைத்துளி
உள்ளத்து ரசனையே....
உருவாக்கும் கவிக் கடல்
உண்மையில் மகிழ்ச்சியே...!!!
ஒன்று சொல்கிறேன் - தமிழ்
மென்று வாழ்கிறேன் - இளம்
கன்று போலவே கவலை
வென்று வாழ்கிறேன்........!!!
தமிழ்பசு பாலூட்ட மடி
தாவி முட்டுவேன்...........
வல்லினம் மெல்லினம்
இடையினம் என்றே
வாஞ்சையுடன் என் நெற்றியை
வண்ணத் தமிழ் பசு நாக்கு வருட....
அம்மா என்றே அழைத்து மகிழ்கிறேன்
அவளே தெய்வம் என வணங்கி வாழ்கிறேன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (24-Jun-15, 12:09 pm)
Tanglish : amma
பார்வை : 190

மேலே