24-06-2015 கருத்திலே பூத்த கவிகள்

24-06-15:
249502-மெய்யனின் பாடல் கண்டு எழுதியது...பார்க்க!
வானருவி கொட்ட வளைந்தகொடி ஆடித்
தானதிலே, நீராடத் தான்கண்ட - மேனியெழில்
என்னுள் குளிரூட்டும் ஏக்கம் தலை,நீட்டும்
உன்னுள் எழுவ(து) உரை!

கோடை மழையில் கொடைவிலக்கி நிற்பவளின்
ஆடை அழகுமுகம் ஆனந்தம் - சாடையெலாம்
கண்டு கொதிப்புற்றேன் காரிகை,என் மேல்மழையாய்க்
கொண்டால் அடங்கும் கொதிப்பு!
மெய்யன் நடராஜ் மிக,நாசூக் காய்,உரைத்தாய்!
ஐய!எனக்(கு) ஆகா தது!
=== +++===
முகனூலில் 23-06-15-இல் ராம்வஸந்த் கவிதை படித்து
"தொன்னூறு பைசா கிங்ஸ்
ஒன்னரை ரூபா டீ
கொண்டுவந்த மாலை சந்தோஷங்களை
விவாதங்களை சிந்தனைகளை
எந்த வாட்ஸப் குரூப்பும்
இப்போது ஏற்படுத்தவில்லை..." இது ராம் வஸந்தினுடையது;

கருத்துக் கவி:
தொட்டிழுத்துத் தூக்கித் தொடர்ந்துதட்டில் சேர்த்து,மூச்சுத்
தட்ட உறுஞ்சியதைத் தானினைத்(து) --எட்ட,நின்றே
ஏக்கமுடன் வாழ்வோர்க்கிங்(கு) ஏதைய்யா சந்தோஷம்?
தூக்கமெங்கள் 'நோட்ஸ்'இப்போ து!
====== ============

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (24-Jun-15, 8:02 pm)
பார்வை : 61

மேலே