இரு வட்டங்கள் -ரகு

ஒரு சூரியன்
ஒரு நிலா இவ்வுலகம்
ஒரு கனவு
ஒரு காதல் என்னுலகம்

ஒரு மழை
சில பூக்கள் என் கவிதை
உன் புன்னகை
உன் மௌனம் என் சுவாசம்
பல மௌனம்
சில பார்வை உன் பயணம்
சிறு சிறகு
துளி வானம் என் காதல்
துளி ஆசை
பெரு அடக்கம் உன் வட்டம்
ஒளிர் காற்று
உதிர் தூறல் உன் வருகை
நீர் மொழி
தீ ஒளி உன் விழிகள்
அடர் மழை
அலை சுதி உன் பேச்சு
தொடர் தேடல்
அதில் ஏக்கம் என் இதயம்

உன் வட்டம் உன் வாழ்க்கை
என் வட்டம் அது கவிதை

ஒரு சூரியன்
ஒரு நிலா இவ்வுலகம்
ஒரு கனவு
ஒரு காதல் என்னுலகம்
====================
குழப்பங்கள் இருப்பின் மன்னிக்க.......
சிறு நதி அதன் வழி என் கவிதை !!!
அன்புடன்
--சுஜய் ரகு--

எழுதியவர் : சுஜய் ரகு (25-Jun-15, 6:29 pm)
பார்வை : 99

மேலே