மின்னஞ்சல்

அன்னைக்கு நீ வந்த
மிதிவண்டி நா தந்த ,
கைபுடிச்ச இடமெல்லாம்
கட்டெறும்பு மொய்க்குமுனு ,
கட்டெறும்ப கொள்ள சொல்லி
காத்துகிட்ட தூதுவிட்ட ,
காத்தும் கரைந்ததடி
கட்டெரும்பும் மயங்குதடி
நீ கண்ணோரம் பாத்ததால ,
தெனந்தோறும் தெருவெல்லாம் தேரோன்னு போனதென்ன ,
நீ வந்த நாள் மட்டும் திருவிழா ஆனதென்ன ,
தெருனாலும் தெருச்சி வந்து
உன் மூச்சி வாங்கி நின்ன ,
ஊரெல்லாம் நமைப்பார்க்க
நீ மட்டும் எனைப்பார்க்க
மெதுவான கோர்வையில
மின்னஞ்சல் கேட்டபுள்ள ...........