உண்மையை அறிந்திடு பாப்பா

அன்றும் இன்றும் என்றும் எங்கும்

பேரின்பம் தருவது உண்மை ஒன்றே

இதை அறிந்தும் அறியாது போல்

பொய்மையை நாடிடும் மனிதர்கள்

வாழ்கையில் நிம்மதி இழப்பதேனோ


பொய்யால் உயர்க்கல்வி பட்டம் கிட்டிடலாம்

பொய்யான வழிகளிலே பெரும் பணம் கிட்டிடலாம் -ஆயின்

அந்த பொய்கள் மனதில் ஆழ பதிந்து

தீயில் காய்ச்சிய வேல் ஒப்ப மனசாட்சியை

உறுத்தி கொண்டே இருக்கும் வாழ்கையில்

நிம்மதி நிரந்திரமாய் மறைந்து போகும்

எல்லாம் இருந்தும் ஒன்றும் இல்லா

வாழ்க்கையாய் வந்து துன்புறுத்தும் முடிவில்

ஒரு பொய்யை மறைக்க பல பொய்கள்

முளைத்தெழும் அவை அம்பலம் ஆயினபின்

முனைந்தாலும் இழு பெயர் மாறாது

உண்மை என்றும் ஊமை ஆவதில்லை

அலையிலா ஆழ்கடல் போல

மனதில் அமைதியை தேக்கி நிற்கும்

அந்த ஆண்டவனையும் கண்முன் நிறுத்தும்

உண்மை வாழ்வை வுய்விக்கும்

உண்மையே உன்னை நாட இன்றே

அறிந்திடு எந்தன் தங்க பாப்பா -அந்த

அரிசந்திரன் கதையை பாட்டியிடம் மறவாமல்

கேட்டு அறிந்திடுவாய் அது சொல்லும் கருத்தை

மனதில் ஆழ படித்திடுவாய் -அந்த மெய்யே

மெய்யாய் உன்னை வாழ வைக்கும்

பெரும் தனத்தால் பேரின்பம் கிட்டாது.
உண்மையை விலைகேட்டு வாங்க முடியாது

எழுதியவர் : வாசவன்-வாசுதேவன்-தமிழ்பி (26-Jun-15, 2:47 pm)
பார்வை : 75

மேலே