இரண்டும் ஒன்று

.....................................................................................................................................................................................................
காலையில் கடிந்து விரட்டி
மாலையில் பரிந்து குழையும்
தந்தை மனம்;
மதியம் மண்டை பிளந்து
மாலையில் மழையடிக்கும்
வெப்பச் சலனம்.
அப்பாவின் மனமும்
வெப்பச் சலனமும் ஒன்று.