சரித்திரமாய் நின்றிடுவாய் என்றே பொங்கு
ஆர்கலித்து தமிழருடை கரத்தில் ஏரும்
ஆடிபெரு ஐப்பசியை போக்க , விண்ணின்
கார்களித்து கண்ணசவைக் காட்ட , நீரும்
கழனியிலே பாய்ந்துவிடும் வருமை யோட்ட !
மார்கழியும் கழிந்துவிட தையல் என்பாள்
மண்மடியில் நென்மணியை குவித்து நின்றாள் !
பார்களித்து பொங்கலினைப் பாடச் செய்து
பாவையவள் நடம்புரிவாள் பாங்காய் இங்கே !
கண்ணலுடன் கரங்கோத்து மணிகள் எல்லாம்
கழனிவிட்டு போங்கன பொங்கி நிற்க
இன்னலுறும் இன்றமிழர் இன்பம் எய்த
இல்லினிலே பானையினில் வந்து சேரும் !
உண்ணுகின்ற உயர்வெல்லாம் தமிழர் பெற்றே
உய்கின்ற வழிபடைக்கும் வழிகொடுக்கும் !
என்னருமை தமிழினத்தீர் ! இற்றைப் போலே
என்றும் நல வாழ்வுதனை வாழ்கவென்று !
பொங்கலிடும்! போங்கலோபோ கல்லில்லென்று
பொங்குகின்ற நெஞ்சமதில் தன்மை நல்கும் !
‘ சிங்கமென பெருவலியோய் ! உன்றன் சீர்மை
செகமீதில் பண்டைப் போல் நின்றிலங்கி,
கங்குகரை உடைத்தெறிந்து கழனி பாய்ந்து
களம் காண்பாய் ! வளமெல்லாம் கொணர்ந்து சேர்ப்பாய் !
சங்கொளித்து பகைமுடித்து முன்னோர் போல
சரித்திரமாய் நின்றிடுவாய் ‘ என்றே பொங்கு !