பட்டாம்பூச்சி என்னாச்சி
இரும்பு பட்டறைகளில் மாட்டிக்கொண்ட
பிஞ்சித்தொழில் ... இவர்கள்
குழந்தை தொழிலகங்களில் மாட்டிக்கொண்ட
பெரும் பெரும் விஞ்ஞானிகள் இந்த
குழந்தை தொழிலாளர்கள் ..
பட்டினிக்கு உணவு புசிக்க வேண்டி,
பட்டாசுகளுக்கு மருந்து திணிக்க நேரிட்ட,
வறுமை இவர்களுக்கு ..
இவர்களுக்கு முன் இரண்டு அக்காக்கள்
திருமணம் ஆகாமல் இருப்பார்கள் ..
அம்மாவோ , அப்பவோ உடல் நிலை இழந்திருப்பார்கள்
கால்சட்டை கந்தளுக்கு அவமானப்பட்டிருந்திருப்பார்கள்
பள்ளியில் பட்ட அவமானங்களுக்காக கூட
இவர்கள் தொழிற்காலன் ஏந்தநேரிட்டிருக்கும் ...
எதோ ஓர்நாள் எடுத்துவைத்த மயிலிறகு
சட்டை பையில் குட்டி போட்டிருக்கும் என நம்பி
இழகிய மனங்களோடு இறுக்கங்களை
சுமக்க தொடங்கிவிட்டனர் .....
முதற் மூன்று பொத்தான் இழந்த
சட்டையணிந்து...
இந்த பட்டாம் பூச்சிகள் ......