திருமணம்

எப்போது மனிதன்
காதலையும் தாம்பத்தியத்தையும்
கருவியாக பயன்படுத்த தொடங்கினானோ
அன்றே திருமணம் என்னும் பந்தம்
தற்கொலை செய்து கொண்டது...
பலரும் நேசிக்கவில்லை
திருமணத்தை தற்காத்துக்கொள்ள
தந்திரங்களே புரிகின்றனர்
இங்கு தாம்பத்தியம் என்பது
குழந்தை பெற்றுகொள்ளவும்
தன் தேவை பூர்த்தி செய்துகொள்ளவும் மட்டுமே பயன்படுகிறது
தாம்பத்தியம் என்பதே தலையணை மந்திரமாகவும்
மனைவியை தக்கவைத்து கொள்ளும் மந்திரமாகவும்
போதிக்கப்படுகிறது
இங்கு காதல் நிகழவில்லை
திட்டமிடபடுகிறது
திருமணம் வியாபாரமானது
காதல் கட்டாயமானது
எதையும் எதிர்பார்க்காமல் நேசிக்க கற்றுதரபடவில்லை
திருமணம் ஒரு கடமையாய் மாறியது
கடமைக்காக செய்யும் ஒரு செயலில்
சலிப்பு மட்டும் தான் மிஞ்சும்....