நெஞ்சறைபெட்டி ,,,,

முள்ளில் இதயம் ....
என் ரோஜாக்களை பறித்துவிட்டார்கள்
பூக்களை சுமந்தவன் காதலை சொன்னதும்
காதலி தான் அதை கசக்கி எறிவதும்
ஒரு தலை காதல் பூ விரயங்களை ஏற்படுத்துகிறது
நிலவென அவளை சொல்லி
அமாவாசையில் அவதிப்படுகிறேன் நான்
'''நீ பார்த்தாய் ''' இதை
பிருவங்களின் பிரசவம் எனலாமா ?
ரேடியங்களை பகலில் தேடுவதாய்
கண்ணாடி துண்டுகளை தண்ணீரில் தேடுவதாய்
மொத்தசிந்தனையும் அறிவியல் அறிவிழந்திருக்கிறது ...
தாத்தாவின் பெட்டிக்குள் பேரன்களின் உயிலாய்..
உயில் இருந்தும் தற்காலிக உயிர் இழந்திருக்கிறது
என் நெஞ்சறை பெட்டி .....

எழுதியவர் : (28-Jun-15, 11:44 am)
பார்வை : 60

மேலே