பயனற்ற மன்னிப்பு

பயனற்ற மன்னிப்பு

வார்த்தைகளில் விஷம் வைத்து என்மீது வீசுகிறாய்
என் எண்ணங்களில் உருவான கருக்களை ஒவ்வொரு முறையும் சிதைத்து விடுகிறாய்
இனிமையான வார்த்தை இரண்டு கூறுவதற்குமுன் என் இதயம் பிளந்துவிடுகிறாய்
தனிமையில் இருந்தாலும் தேடி வந்து துக்கம் தருகிறாய்
என்றும் என் பலவீனத்தின் மீதே அம்பு எய்துகிறாய்
புண் ஆறுவதற்குள் அடுத்த அம்பை எய்து விடுகிறாய்
என்னிடம் ஆயுதம் ஏதுமில்லை என்றுத் தெரிந்தே தாக்குகிறாய்
எரிவது தெரிந்தே எண்ணெய் ஊற்றுகிறாய்
என் வலியும் வேதனையும் உனக்கு வழக்கமான ஒன்று
ஒவ்வொரு முறையும்
கூட்டையும் குஞ்சுகளையும் சேர்த்து எரித்துவிட்டு
மன்னிப்பு கேட்கிறாய்
மன்னிப்பின் மகத்துவம் தெரியாமல்

எழுதியவர் : (28-Jun-15, 2:20 pm)
பார்வை : 93

மேலே