சாளரத்தில் ஓர் அரங்கேற்றம்

வெளிச்சத்தை தடுக்கும்
திரை
தென்றலை வரவேற்குது
வெளிச்சமும் தென்றலுடன்
உள்ளே நுழையுது
திரையும் தென்றலும்
வெளிச்சமும் கைகோர்க்க
ஒரு மெல்லிசை நடனம்
சாளரத்தில் அரங்கேறுது !
____கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Jun-15, 8:16 pm)
பார்வை : 133

மேலே